உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலையூர் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

நிலையூர் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

மதுரை: நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்புக் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.வலையங்குளம், எலியார்பத்தி பொதுமக்கள் விவசாயி மணி, பெரியபெண்ணாச்சி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குமுதாராமன் உட்பட பலர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது:நிலையூர் - கம்பிக்குடி நீர்பாசன நீட்டிப்பு கால்வாய் பாசனத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களின் 54 கிராமங்களின் 96 கண்மாய்கள் உள்ளன. 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இப்பாசன பகுதியில் உள்ளது. தற்போது நிலையூர் கண்மாயில் தண்ணீர் திறப்பது பெருங்குடி வரை வருகிறது.அதனைத் தொடர்ந்து கால்வாய் நீட்டிப்பு பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இப்பகுதியில் கிணற்று நீரை பயன்படுத்துவோர் நெல்நடவு செய்துஉள்ளனர். அவர்களுக்கும் அறுவடை வரை தண்ணீர் கிடைக்குமா என தெரியவில்லை. இப்பகுதியில் மல்லிகைப்பூ, நீண்ட கால பயிரான வாழை விவசாயம் நடக்கிறது. இக்கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டால் விவசாயம் செழிப்பதுடன், கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ