உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டினா அப்போ மாசு... இப்போ துாசு...

உசிலம்பட்டினா அப்போ மாசு... இப்போ துாசு...

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடக்கும் பகுதிகள் மட்டுமல்லாது நான்கு ரோடுகளிலும் புழுதியால் ஏற்படும் துாசியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்காக அடைக்கப்பட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அரசு குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. பஸ்கள் உள்ளே சென்று வருவதற்கு தற்காலிக ரோடு அமைத்துள்ளனர். பஸ்கள் வரும் போது மண் துாசியும் தொடர்ந்து வருகிறது.இதேபோல் மதுரை, தேனி ரோடுகள் விரிவாக்க பணிகள் நடப்பதால் தார் ரோடு இருப்பதற்கான அடையாளம் தெரியாத அளவிற்கு புழுதி படலம் ஏற்பட்டுள்ளது. தவிர கவண்டன்பட்டி ரோட்டில் குடிநீர் குழாய் பதித்தபின் ரோடு புதுப்பிக்கப் படாமல் உள்ளது. பழைய தாலுகா அலுவலகம் அருகில் இருந்து கண்ணன் தியேட்டர் வரையில் சேதமடைந்த ரோட்டை புதுப்பிக்காமல் ஜல்லிகளால் பள்ளங்களை நிரப்பி வைத்துள்ளனர். ரோடுகளில் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் புழுதி ரோட்டோர கடைகளுக்குள் பரவியும், பாதசாரிகளுக்கும் தொந்தரவு தருகிறது. ரோடுகளில் அப்புறப்படுத்தாமல் தேங்கிக்கிடக்கும் மணல் துாசிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ