| ADDED : பிப் 16, 2024 05:34 AM
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வைகை இலக்கிய திருவிழா நடந்தது.துவக்கி வைத்து கலெக்டர் சங்கீதா பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை இன்றைய இளைஞர்கள் அறிந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்காகவே தமிழக அரசு இதுபோன்ற இலக்கிய திருவிழாக்களை நடத்தி வருகிறது. மதுரையில் முதல், இடை, கடைச்சங்க காலங்களில் தமிழ் இயல், இசை, நாடகத்தை போற்றி வளர்த்துள்ளனர். தமிழ் வளர்ச்சியில் மதுரையின் பங்கு மிகப்பெரியது. தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் வைகைத் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி, தகவல் அலுவலர் காமாட்சி, நுாலகர்கள் தினேஷ், சந்தானகிருஷ்ணன் பங்கேற்றனர்.