இரும்பாடியில் வைகாசி திருவிழா
சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் தடிகார மாயாண்டி சுவாமி கோயில் வைகாசி திருவிழா நடந்தது. சுவாமிக்கு புதிதாக செய்யப்பட்ட சிலை பாரம்பரிய முறைப்படி வேளாளர் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊர் மையத்தில் நிறுவப்பட்டது. சாமியின் திருக்கண்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. சப்பர தேரில் சுவாமி எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். கிராம கமிட்டியினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.