மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
06-May-2025
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
27-May-2025
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்ஸவத் திருவிழா மே 31ல் துவங்கி ஜூன் 9 வரை நடக்கிறது.முதல் நாள் காலை 10:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகார்ச்சனை, மதியம் 3:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மஹா அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு சுவாமி புறப்பாடு, 6:00 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது.விழாவின் முக்கிய தினமான வைகாசி விசாக தினத்தன்று (ஜூன் 9) காலை 8:00 மணிக்கு சண்முகார்ச்சனை, 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு சுவாமி புறப்பாடு, 6:00 மணிக்கு மஹா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரையில் உச்சி மாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் (மே 27) தொடங்கியது. கிராமத்தார்கள் சார்பாக செவ்வாய் சாற்றப்பட்டு, கொடியேற்றப்பட்டது.அம்மன் சிம்ம வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் அமுதா, கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.
06-May-2025
27-May-2025