உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலம்மாள் கல்லுாரி பல்திறன் போட்டி

வேலம்மாள் கல்லுாரி பல்திறன் போட்டி

மதுரை மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் தேசிய அளவிலான ஐ.எஸ்.டி.இ., ப்ராஜெக்ட் கான்டெஸ்ட்- 3 இடியாட்ஸ்'25 நடந்தது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 105 மாணவர்கள் பங்கேற்றனர். டீன் நர்மதாபானு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அல்லி, துணை முதல்வர் பெருமாள்ராஜா தலைமை வகித்தனர். முதல் பரிசாக நாமக்கல் கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ரூ.5 ஆயிரம் வென்றனர். உதவி பேராசிரியர் கோபிநாத் நிகழ்வு குறித்து விளக்கினார். தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !