பாலியல் வழக்கில் தீர்ப்பு: ஏ.பி.வி.பி.,வரவேற்பு
மதுரை: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததை மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., வரவேற்றுள்ளது.மதுரையில் மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளதாவது: குற்றவாளி தி.மு.க., என்பதால் இவ்விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்த நிலையில், ஏ.பி.வி.பி., போராட்டத்தால் இச்சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாதித்த மாணவியின் விவரங்களை வெளியில் கசியவிட்டு தி.மு.க., அரசு பழிவாங்கியது.இச்செயலையும், போலீசாரின் அலட்சியத்தையும் கண்டித்து ஏ.பி.வி.பி., நடத்திய போராட்டத்திற்கு பின்னர், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தது. 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இன்று குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இது குற்றவாளியை காப்பாற்ற நினைத்த தி.மு.க., அரசின் முயற்சிக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.