விஜய் ராஜா நிறுவனத்திற்கு விருது
மதுரை: தமிழகத்தில் வீடு கட்டுமான துறையில் சாதித்து வரும் விஜய் ராஜா நிறுவனத்திற்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 'அனுகூல வீடமைப்பு விருது' வழங்கப்பட்டது. வீடமைப்பு, நகர்புற உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் தொகன் சாஹூ வழங்கினார்.நிர்வாக தரப்பில் கூறுகையில், ''நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்'' என்றனர்.