மேலும் செய்திகள்
சேறும், சகதியுமான சாலை பொதுமக்கள் அவதி
04-Nov-2024
திருநகர் : மதுரை விளாச்சேரியில் மாநகராட்சி எல்லைக்குள் வேளார் தெரு ரோடு, 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சேறும் சகதியுமாகி, மக்கள் நடப்பதற்கே லாயக்கற்றதாக உள்ளது.விளாச்சேரி ஊராட்சி எல்கை முடிவு, மாநகராட்சி 97வது வார்டு துவக்கத்தில் உள்ள வேளார் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. அதன்பின்பு பராமரிப்பே இல்லை. சமீபத்தில் பெய்த மழையால் ரோடு சேறும், சகதியுமாக உள்ளது. அப்பகுதியில் ஏராளமான பொம்மை தயாரிப்பாளர்கள் உள்ளதால் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மிகுந்த அவதியுறுகின்றனர்.டூவீலர்களில் செல்வோர் விழுந்து காயம் அடைகின்றனர். ரோடு மாநகராட்சி எல்லைக்குள் இருப்பதையே அதிகாரிகள் மறந்து விட்டனர் என தெரிகிறது. இந்த ரோட்டை சீரமைத்து தார் சாலை அமைக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
04-Nov-2024