மேலும் செய்திகள்
உசிலம்பட்டி ஏட்டு கொலையில் மேலும் ஒருவர் கைது
01-Apr-2025
ஏட்டு கொலையில் மேலும் ஒருவர் கைது
02-Apr-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி வி.பெருமாள்பட்டி கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்குள்ள மந்தையம்மன் கோயிலில் கிராமக்கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில் விசேஷ வீடுகளின் ஊர்வலம் நடக்கும் போது பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள், பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க பட்டாசு வெடிக்க கூடாது. மீறி வெடித்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். போலீஸ் துறையினரிடமும் புகார் செய்யப்படும். கிராமத்திற்குள் மது உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. உள்ளூர் மக்கள் தங்கள் குழந்தைகளை இங்குள்ள அரசு பள்ளியில் தான் சேர்த்து விட வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். சில மாதங்களுக்கு முன் மலைப்பட்டி கிராமத்திலும் இதே போல் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.
01-Apr-2025
02-Apr-2025