உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

அரசு பஸ்சை சிறை பிடித்த கிராம மக்கள்

திருமங்கலம்: திருமங்கலம் அருகே இரவு நேரத்தில் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளிக்குடி தாலுகா சின்ன உலகாணிக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.அவனியாபுரம், மண்டேலா நகர், கூடக்கோவில், கொம்பாடி வழியாக இந்த பஸ் தினசரி எட்டு முறை சென்று வந்தது. சில மாதங்களாக இதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு பாதியில் ட்ரிப்பை கட் செய்து விட்டு திரும்பி சென்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7:45 மணிக்கு சின்ன உலகாணிக்கு வந்த இந்த பஸ் புதுப்பட்டி கிராமத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால் சின்ன உலகாணி கிராம மக்கள், மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து ஊருக்கு வந்தனர்.இதையடுத்து அங்கு சென்ற கிராம மக்கள் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தைநடத்தி முறையாக இயக்கப்படும் என உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !