காத்திருப்பு போராட்டம்
மேலுார்; மேலுார் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். செயலாளர் ராமையா, துணை தலைவர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.