உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

மேலுார்: மேலுாரில் யூனியன் அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காந்திநகர், எஸ்.எம்., நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.இதில் தாலுகா அலுவலகம் முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து நகராட்சி நிர்வாகம் ஒரு லிட்டர் ரூ.16 விலைக்கு வாங்கும் தண்ணீர் ரோட்டில் வீணாகுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.தவிர சுகாதாரமற்ற குடிநீர் சப்ளையாகிறது. உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து சுகாதாரமான தண்ணீர் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி