மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
திருமங்கலம்:: திருமங்கலம், கள்ளிக்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் செடி கொடிகளால் சூழப்பட்டு துார்ந்து போய் கிடக்கிறது. திருப்பரங்குன்றம் ஊராட்சி நிலையூர் கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. இக்கண்மாய் நிறைந்து மறுகால் செல்லும்போது ஆலங்குளம், திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றியங்களில் உள்ள கண்மாய்கள் தண்ணீர் வசதி பெறும். இக்கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் தற்போது செடி கொடிகளால் சூழந்து துார்ந்து போய் உள்ளது. இதனால் மறுகால் செல்லும்போது தண்ணீர் செல்ல வழியின்றி தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாயை துார்வார வேண்டும்.
01-Dec-2024