உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டிரைவர்களுக்கு பயிற்சியை அதிகரிப்போம்; போக்குவரத்து துறை அமைச்சர் 

 டிரைவர்களுக்கு பயிற்சியை அதிகரிப்போம்; போக்குவரத்து துறை அமைச்சர் 

மதுரை: பஸ் விபத்துகளை தடுக்க டிரைவர்களுக்கு பயிற்சியை அதிகரிக்கிறோம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மதுரையில் கூறினார். திருப்பத்துார் அருகே கும்மங்குடியில் இரண்டு அரசு பஸ்கள் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சந்தித்து அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விபத்துக்குள்ளான இரண்டு பஸ்களையும் இயக்கியவர்கள் ஒப்பந்த டிரைவர்கள் இல்லை; அரசு டிரைவர்கள் தான்.உரிய அனுபவமுள்ள, தகுதியான டிரைவர்கள் தான் அரசு பஸ்களுக்குதேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து நடந்து உள்ளது. விபத்துகளை தடுக்க டிரைவர்களுக்கானபயிற்சிகளை இன்னும் அதிகரிப்போம். நீண்ட தூர பஸ்களுக்கு அனுபவமுள்ள டிரைவர்களை தான் பயன்படுத்தி வருகிறோம். டிரைவர்களுக்கு பணிச்சுமை குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்றார். மதுரை மேலாண் இயக்குநர் சரவணன், கும்பகோணம் மேலாண் இயக்குநர் தசரதன், அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் உடனிருந்தனர்.பின்னர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களிடமும் ஆறுதல் தெரிவித்தும்,சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை