மேலும் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை
26-Sep-2024
குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்
27-Aug-2024
அவனியாபுரம்: மதுரை வலையங்குளம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறும் 27 தொழு நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வலையங்குளம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. சட்டை, வேட்டி, சேலை, போர்வை, காலணிகளை டாக்டர் அர்ச்சனா வழங்கினார். துணை இயக்குனர் அலுவலக (தொழுநோய்) மேற்பார்வையாளர்கள் தாமரைக்கண்ணன், சிவக்குமார் கலந்து கொண்டனர். சுகாதார நிலைய மேற்பார்வையாளர் முத்துமாயன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை ஏற்பாடுகள் செய்தனர். சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.
26-Sep-2024
27-Aug-2024