நலத்திட்ட உதவி
மதுரை: தே.கல்லுப்பட்டியில் நண்பர்கள் வட்டார அமைப்பு நலத்திட்ட உதவிகளை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த அமைப்பிடம் அருப்புக்கோட்டை ரெஜினாபானு என்பவர் 2 குழந்தைகளுடனும், ரபியத்துலா பகிரியா என்பவர் 3 குழந்தைகளுடனும் வறிய நிலையில் சிரமத்துடன் வசிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள முதுகலை ஆசிரியர் ஒருவர், அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி ராணுவ வீரர் மணிவண்ணன் மற்றும் நண்பர்கள் வட்டார அமைப்பு ஆகியவை சார்பில் தலைவர் பாஸ்கரன், செயலாளர் விஜயபார்த்திபன் ஆகியோர் தையல் இயந்திரம் வழங்கினர்.