உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குட்லாடம்பட்டி அருவியை சீரமைப்பது எப்போது? பட்ஜெட்டில் அரசு அறிவித்து 6 மாதங்களாகிறது

குட்லாடம்பட்டி அருவியை சீரமைப்பது எப்போது? பட்ஜெட்டில் அரசு அறிவித்து 6 மாதங்களாகிறது

மதுரை : 'வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவி சீரமைக்கப்படும்' என தமிழக பட்ஜெட்டில் அறிவித்து ஆறு மாதங்களாகியும் அதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை.2018 ல் வீசிய கஜா புயலால் குட்லாடம்பட்டி அருவிக்கு செல்லும் வழியில் பாறைகள் உருண்டு மலைப் பாதை மறைக்கப்பட்டது. அருவியின் கீழே நின்று குளிக்கும் வகையிலான படிக்கட்டுகள், கைப்பிடி, உடை மாற்றும் அறைகள் அனைத்தும் சேதமடைந்தன. வனத்துறை கட்டுப்பாட்டில் அருவி உள்ளதால் அருவியை சீரமைக்க வனத்துறை மூலம் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு இரண்டாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.சுற்றுலாத்துறை மூலமும் திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு பணிகள் நடக்கவில்லை. ஆறாண்டுகளை கடந்துவிட்ட நிலையில் சுற்றுலாத்துறை மூலம் குட்லாடம்பட்டி அருவி, திண்டுக்கல் பிளவக்கல் அணைப்பகுதி சீரமைப்பு உட்பட 3 பணிகளுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.ஆறு மாதங்களை கடந்த நிலையில் இதுவரை விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.,) தயார் செய்யப்படவில்லை. சுற்றுலாத்துறை மூலமோ, வனத்துறை மூலமோ டி.பி.ஆர்., தயார் செய்து சுற்றுலாத்துறைக்கு அனுப்பினால் தான் துறையின் மூலம் அரசாணை வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கப்படும். அதன்பின் வனத்துறைக்கு நிதி மாற்றப்பட்டால் மட்டுமே டெண்டர் மூலம் பணிகள் மேற்கொள்ளமுடியும்.குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க 3 மாதங்கள் போதும். இப்போதே பணிகளை துவக்கினால் தான் வடகிழக்கு பருவமழையின் போது அருவியில் கொட்டும் தண்ணீரின் அழகை மதுரை மக்கள் அனுபவிக்க முடியும். எனவே தாமதமின்றி அரசாணை வெளியிட்டு நிதியை ஒதுக்க சுற்றுலாத்துறை முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anandamari Suryanarayanan
செப் 02, 2024 10:40

நாட்டில் எதுவும் சரியான நேரத்தில் நடப்பதில்லை. எதாவது அசம்பாவிதம் அல்லது வருமானத்தின் பொருட்டு தான் நடக்கும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை