உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா

அலங்காநல்லுார்: ‘அ.புதுப்பட்டியில் சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்’ என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அ.புதுப்பட்டி வடக்குத்தெருவில் ஏராளமானோர் வசிக்கின்றனர். அலங்காநல்லுார், தனிச்சியம் மெயின் ரோடு தெருவின் நுழைவாயிலில் தாழ்வான நிலையில் சாக்கடைக் கால்வாய் அமைந்துள்ளது. இதனால் தரை மட்டத்தில் கழிவு நீர் செல்கிறது. மழைக் காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி வீதியில் தேங்குகிறது. அப்பகுதியினர் சிரமமடைகின்றனர். அப்பகுதி ரேணுகா கூறியதாவது: சாக்கடை கால்வாய் கட்டி பல ஆண்டுகளாகிறது. தற்போது தரை மட்டத்தில் கழிவுநீர் செல்கிறது. இதில் உருவாகும் புழுக்கள் வீடுகளுக்குள் சாதாரணமாக வருகின்றன. அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன், தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகின்றன. மழைக் காலங்களில் தவியாய் தவிக்கிறோம். ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் புதிய கால்வாய் அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை