உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாடிப்பட்டி அய்யனார் கோயில் கண்மாய் துார்வாரப்படுமா

வாடிப்பட்டி அய்யனார் கோயில் கண்மாய் துார்வாரப்படுமா

வாடிப்பட்டி : வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டுநீரேத்தான் அய்யனார் கோயில் கண்மாயை துார்வார விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.இக்கண்மாய்க்கு வைகை பெரியாறு பாசன கிளை கால்வாய் மூலம் நீர் வரத்துள்ளது. 15 ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட கண்மாயில் 2 ஏக்கர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. நீர் பிடிப்பு பகுதி குறைவாக இருப்பதால் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்த முடியவில்லை.பாசன நீர் மற்றும் மழை நீர் அப்படியே வெளியேறி வயல்வெளி வாய்க்கால்களில் பாய்வதால் மழைக்காலங்களில் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நடவு மற்றும் அறுவடை நேரங்களில் நெற்பயிர்கள், கதிர்கள் பாதிக்கின்றன. சீமை கருவேல மரங்களை அகற்றி கண்மாயை துார்வாரி ஆழப்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை