தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பரா
சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.எம்.எஸ். காலனி, மெயின் ரோடு சந்திப்பில் வைத்துள்ள தடுப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.இங்கு 150 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆர்.எம்.எஸ். காலனி ரோடு, மதுரை மெயின் ரோடு சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் குடியிருப்பு வாசிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மறுத்ததால், போலீஸ் அனுமதியுடன் மெயின் ரோட்டில் இரும்பு தடுப்புகளை வைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.ஆர்.எம்.எஸ். காலனி பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்கும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை உள்ளது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. பஸ் ஸ்டாப் அருகே வாய்க்கால் உள்ளது. அதில் தடுப்புகள் இல்லாததால் பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகள் இரவில் தடுமாறி விழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. போலீசார் தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும். நெடுஞ்சாலை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.