உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பெண் துாக்கிட்டு தற்கொலை

 பெண் துாக்கிட்டு தற்கொலை

திருமங்கலம்: மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் தர்மராஜ் 75. இவரது மகள் திவ்யா மலேசியாவிற்கு மேற்படிப்பு படிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அனுப்பானடியைச் சேர்ந்த பிரகாைஷ காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருநகர் வெண்கல மூர்த்தி நகரில் குடியிருந்தார். மகள் மலேசியாவில் படித்துக் கொண்டிருப்பதாக நினைத்து தர்மராஜ் படிப்பிற்கான பணத்தை அனுப்பி வந்தார்.நவ., 5ல் திவ்யா துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தர்மராஜுக்கு தகவல் தெரிந்து அவர் சென்று பார்த்த போது திவ்யாவுக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. தர்மராஜ் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பிரகாசுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. திவ்யா நவ., 13ல் உயிரிழந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ