உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் மெகா கோலப் போட்டி கைவண்ணம் காட்டத் தயாரா பெண்களே முன்பதிவு செய்து பங்கேற்கலாம்

தினமலர் மெகா கோலப் போட்டி கைவண்ணம் காட்டத் தயாரா பெண்களே முன்பதிவு செய்து பங்கேற்கலாம்

மதுரை: மதுரையில் தினமலர் நாளிதழ் சார்பில் நடைபெற உள்ள 'மெகா கோலப்போட்டி'யில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உடனே முன்பதிவு செய்யலாம்.மாதங்களில் மாண்புமிக்க மார்கழியில் ஆண்டுதோறும் தினமலர் சார்பில், பெண்களுக்காகவே தமிழர்களின் கலாசாரமான கோலம் வரைதல் போட்டி நடக்கிறது. இந்தாண்டுக்கான போட்டி, மதுரை அரசரடி யூ.சி., பள்ளி மைதானத்தில் 2025, ஜன.5 ல் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை நடக்கிறது.அழகான கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு பரிசுகள், மற்றவர்களுக்கு அசத்தலான ஆறுதல் பரிசுகள் உண்டு. போட்டியில் பங்கேற்போரே அதற்கான பொருட்களுடன் வரவேண்டும். உதவிக்கு தங்களுடன் ஒருவரை அழைத்து வரலாம். போட்டி நேரம் 60 நிமிடங்கள். அதற்குள் உங்கள் கைவண்ணத்தைக் காட்ட வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 96777 60856ல் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். அனுமதி இலவசம். பவர்டு பை இணைந்து வழங்குவோர்: போத்தீஸ், ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ், சத்யா ஏஜென்ஸீஸ்.இணைந்து வழங்குவோர்: மதுரை பாண்டியன் அப்பளம், மனோ புக் சென்டர், எஸ்.வி.எஸ்., அக்மார்க் கடலைமாவு, ஆனந்தா ஆனந்தா நிறுவனங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !