மகளிர் தின விழா
திருப்பரங்குன்றம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பசுமலையில் நடந்தது. 500க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., வழங்கினார். தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ் சத்யன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிரணி நிர்வாகிகள் கண்ணகி, சசிகலா, சண்முகப்பிரியா உட்பட நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.