மேலும் செய்திகள்
பொங்கல் பானையை காய வைக்க முடியாமல் தவிப்பு
27-Dec-2024
பேரையூர்: பேரையூர் அருகே சிலைமலைபட்டியில் பொங்கல் வைப்பதற்கான மண்பானை தயாரிக்கும் பணியில் மட்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொங்கல் திருநாள் தமிழ் கலாசாரம், விவசாயிகளின் உழைப்பின் மேன்மையை உணர்த்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்னும் நடை முறையில் உள்ளது.வீட்டு முற்றத்தில் மண்பானை முதல் பித்தளை பானை வரை பயன்படுத்தி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். இதனால் பொங்கல் வந்தால் மண்பானைகளுக்கான தேவை அதிகரித்து விடும். இச்சூழலில் பேரையூர் அருகே சிலைமலை பட்டியில் பொங்கல் பண்டிகைக்காக களிமண்ணைப் பதப்படுத்தி பானைகள் தயாரித்து உலர வைக்கின்றனர்.சூளை அமைத்து, அதில் நெருப்புமூட்டி மண்பானகளை சுட வைத்து தயார்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பானைகள் தவிர அடுப்புகள், சட்டிகள் உள்ளிட்டவையும் களிமண்ணைப் பயன்படுத்தி தயார் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து இப்பானைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.தொழிலாளி முருகன் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக சட்டி, பானைகள் தயாரிக்கிறோம். மட்பாண்ட தொழிலுக்கு தடையில்லாமல் தேவையான களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். பொங்கல் பானைகளை வியாபாரிகள் பானை ஒன்றுக்கு ரூ.50க்கு வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
27-Dec-2024