உள்ளூர் செய்திகள்

 பயிலரங்கு

மதுரை: மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கைவினைக் கலைஞர்கள் பயிற்சி மையம் சார்பில் மதுரையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலரங்கு நடந்தது. பெட்கிராட் நிறுவனர் சுப்புராமன் தலைமை வகித்தார். பயிற்சி மைய உதவி இயக்குநர் வீணா குத்துவிளக்கேற்றினார். மத்திய, மாநில அரசுகளின் மானிய தொழில் திட்டம், வங்கி சேவை குறித்து கதர் கிராம கைத்தொழில்கள் ஆணைய அலுவலர் ரகுமான், மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் பாண்டியராஜா, தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன், சவுத் இந்தியன் வங்கி நிதிசார் அலுவலர் மீனாட்சிசுந்தரி பேசினர். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, அங்குசாமி கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கீர்த்திராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை