உலக ஓசோன் தினம்
நாகமலை : மதுரை நாகமலைப் புதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில், கல்வி அறக்கட்டளை செயலர் மற்றும் தாளாளர் செந்தில் ரமேஷ் வழிகாட்டுதலில், பள்ளி முதல்வர் லதா திரவியம், துணை முதல்வர் அனிதா கரோலின், தலைமையாசிரியர் பொற்கொடி ஆகியோர் முன்னிலையில் உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது. மாணவி ஹாசினி வரவேற்றார். மாணவிகள் ரித்திகா, கிப்டா, அக் ஷயா ஆகியோர் ஓசோன் படலம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட வனச்சரக அதிகாரி வேனித், ஓசோன் படலப் பாதுகாப்பு குறித்துப் பேசினார். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவி பிரியலக்ஷணா நன்றி கூறினார்.