உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இருக்கு... ஆனா இல்லை: அறிவுசார் மையத்தில் வசதிகள் இலவச வைபை என்னாச்சு

இருக்கு... ஆனா இல்லை: அறிவுசார் மையத்தில் வசதிகள் இலவச வைபை என்னாச்சு

மதுரை: மதுரை மாநகராட்சியின் அறிவுசார் மையத்தில் இலவச வைபை, கழிப்பறை வசதிகள் இருந்தும் இல்லாமல் உள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.மாநகராட்சி வளாகம், கலைஞர் நுாலகம், நீச்சல் குளம் வளாகம், தமுக்கம் அருகே உள்ள அறிவுசார் மையம் பகுதியில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தனியாகவோ, குழுவாகவோ சேர்ந்து படிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக 2021ல் நீச்சல் குளம் அருகே மாநகராட்சி இடத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் வசதிகள் உருவாக்கப்பட்டது. படிப்பதற்கு ஏற்ற சூழல் காரணமாக அதிகாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இங்கு படிக்கின்றனர். தினமும் 500 பேராவது வருகின்றனர். தேர்வு நேரங்களில் இந்த எண்ணிக்கை கூடும்.பயிற்சியாளர்கள் இங்கு வந்து பயிற்சி அளிப்பதும் உண்டு. இங்குள்ள சிறிய நுாலகத்தில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் கிடைப்பதால் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இவர்களுக்கு தினமும் மாலையில் ரோட்டரி சங்கம் சார்பில் சுண்டல் வழங்கப்படுகிறது.பி.காம்., முடித்துள்ள நான், இங்கு ஓராண்டாக படிக்க வருகிறேன். நீச்சல்குளம் பகுதி நிழலில், அமைதிச் சூழலில் படிப்பதால் மனதில் பதிகிறது. தோழியருடன் சேர்ந்து படிப்பது, கலந்துரையாடுவதால் தெளிவு கிடைக்கிறது. நுாலகமும் உதவியாக உள்ளது. குரூப் 1 தேர்ச்சி பெறுவது குறிக்கோள்.பி.இ., முடித்துள்ளேன்.சோழவந்தானில் இருந்து வருகிறேன். காலை 8:00 மணிக்கு பயிற்சியை ஆரம்பிப்பேன். குழுவாக படிப்பது வசதியாக உள்ளது. யுடியூப் பார்த்தும், நண்பர்களிடம் கேட்டும் படிக்கிறேன்.பூபதி, சோழவந்தான்மோனிஷாஅனுப்பானடி

அடிப்படை வசதி இல்லாத அவலம்

போட்டி தேர்வுக்கு தயாராகுவோர் கூறியதாவது: திருமணமானவர்களும் இங்கு வந்து படிக்கிறோம். வாரம் இருமுறை பயிற்சி, 'மாதிரி தேர்வு' வசதி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். ரூ. 2.5 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அறிவுசார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக கம்ப்யூட்டர் மூலம் படிக்கலாம். பயிற்சியாளர்கள் வழிகாட்டுதல்படி சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடக்கிறது. குழந்தைகளுக்கென தனியாக 'கிட்ஸ்' அறை, இலவச வைபை வசதி உண்டு. நுாலகத்தில் அனைத்து தேர்வுக்கும் புத்தகங்கள் உள்ளன.வைபை வசதி சரிவர கிடைக்கவில்லை. பெயரளவில் வைபை வசதியும், பராமரிக்கப்படாத கழிவறையும் பிரச்னையாக உள்ளது. வீட்டில் வசதியில்லாமல் இங்கு வருகிறோம். இங்கும் அந்த நிலை என்றால் என்ன செய்வது. ஞாயிற்று கிழமையும் இம்மையம் இயங்கலாம். மாலை 5:00 மணிக்கு பதில் இரவு 7:00 மணி வரை செயல்பட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !