உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நேற்றைய தேர்தல் சோதனை

 நேற்றைய தேர்தல் சோதனை

ரூ.2.45 லட்சம் தும்பைபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிவர்மன் தலைமையில் நடந்த சோதனையில் டூவீலரில் வந்த பூதமங்கலம் முருகேசனிடம் ஆவணமின்றி இருந்த ரூ.2.45 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். ரூ.1.06 லட்சம் பேரையூர் : தேனி மாவட்டம் சின்னமனுார் முத்துசாமிபுரம் ராமர் 52. வாழைக்காய் வியாபாரி. இவரது லோடு ஆட்டோவில் வாழைக்காய் விற்ற பணம் ரூ.1.06 லட்சத்தை மங்கல்ரேவு அருகே பறக்கும் படை அதிகாரி விவேக் தலைமையிலான குழு பறிமுதல் செய்து, உசிலம்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர். ரூ. 63 ஆயிரம் திருமங்கலம் உதவி வேளாண் அலுவலர் கருப்பசாமி, எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினர், காரில் ஈரோடு மாவட்டத்திற்கு மாடு வாங்க சென்ற தென்காசி கோபால் 62, ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 63 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி முன்னிலையில் திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். ரூ.1.34 லட்சம் அ.வல்லாளபட்டி விலக்கில் பறக்கும் படை அதிகாரி நந்தினி ஆய்வில், அதே பகுதி தங்கபாண்டி, கீழப்பூங்குடி பிரபு கார்களில் ஆவணம் இன்றி இருந்த ரூ.ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். ரூ.3.26 லட்சம் வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயில் பிரிவில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தினேஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ.,சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் சோதனை நடத்தினர். காரில் வந்த ராமநாயக்கன்பட்டி துரைராஜ் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.71 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர். * வாடிப்பட்டி சர்ச் அருகே நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் முத்துராமன், எஸ்.ஐ., ஆனந்தன், ஏட்டு மீனா சோதனையில் டூவீலரில் வந்த வாடிப்பட்டி சரண்குமாரிடம் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்தனர். * நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாண்டிகுமார் தலைமையில் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் செமினிப்பட்டி ரோட்டில் சோதனை செய்தனர். டூவீலரில் வந்த அழகர்சாமியிடம் இருந்து ரூ.1.15 லட்சத்தை பறிமுதல் செய்து, உதவித் தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன், துணைத் தாசில்தார் கருப்பையா ஆகியோர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை