உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / திருச்சுழி அருகே டிரைவர் படுகொலை

திருச்சுழி அருகே டிரைவர் படுகொலை

திருச்சுழி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் காளிகுமார், 33; லோடு வேன் டிரைவர். நேற்று தன் வேனில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு, திருச்சுழி அருகே சென்று கொண்டுஇருந்தார்.அப்போது கேத்தநாயக்கன் பட்டி விலக்கு அருகில், இரண்டு பைக்குகளில் வந்தவர்கள் வேனை மறித்தனர். வேனில் இருந்து இறங்கிய காளிகுமாரை சரமாரியாக வெட்டி தப்பியது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை