உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கொளுத்தப்பட்ட மாஜி கவுன்சிலர் பரிதாப சாவு

கொளுத்தப்பட்ட மாஜி கவுன்சிலர் பரிதாப சாவு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அருண்குமார், 42, வாடகை பாத்திரக்கடை மற்றும் ஜோதிட நிலையம் நடத்தி வந்தார். இவர், பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராகவும் இருந்தார். கடந்த 26ம் தேதி இரவு தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள மாசிலாமணி நாதர் கோவிலில் நடந்த அர்த்தசாம பூஜையில் பங்கேற்ற பின், தட்சிணாமூர்த்தி சன்னிதியில் விளக்கேற்றினார். அப்போது, அவரது முதுகில் ஏதோ ஊற்றப்பட்டதை உணர்ந்து சுதாரிப்பதற்குள் உடையில் தீப்பிடித்து உடல் முழுதும் பரவியது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை