மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன், 40; முன்னாள் ஊராட்சி தலைவர். இவர் அருகில் உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த வீட்டின் முன் சிறுவர்கள் பந்து விளையாடியபோது, பந்து, கேசவன் வீட்டில் விழுந்தது. அதனை தேடிய சிறுவர்கள், கேசவன் வீட்டின் போர்டிகோவில் கட்டி மூடி வைத்திருந்த கழிப்பறை தொட்டி மூடியை அகற்றி பார்த்தனர். அப்போது, தொட்டியில் மனித எலும்புக்கூடு, புடவை மற்றும் ஜாக்கெட் கிடந்தது.தகவலறிந்த பாகசாலை போலீசார், எலும்பு கூட்டை மீட்டு, ஆய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், கேசவனின் தாய் மணிக்கொடி, 65; கடந்த 2 ஆண்டாக கணவில்லை. அதனால், காணாமல் போன மணிக்கொடியின் எலும்பு கூடா அல்லது வேறு ஏதேனும் பெண்ணை கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து போட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3