மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை:சீர்காழியில் சிறுமியை கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தை சேர்ந்தவர் மாயவன், 40; பார்வையற்ற இவர், ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வருகிறார். தனக்கு உதவியாக தனது தங்கை மகள்கள் இருவரை உடன் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சீர்காழி மணிக்கூண்டு அருகே யாசகம் பெற்றபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாயவனுடன் இருந்த 11 வயது சிறுமியிடம் உணவு வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றார். நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் அச்சமடைந்த மாயவன், அப்பகுதி மக்களிடம் முறையிட்டார்.தகவலறிந்த சீர்காழி போலீசார், சம்பவ பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில், அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அடையாளம் தெரியாத நபருடன் சிறுமி செல்வது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு, உணவு வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்தி சென்ற காமராஜபுரம் கோவில் பத்து பகுதியை சேர்ந்த ரஞ்சித், 32, என்பவரை கைது செய்தனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3