பெண்களிடம் மொபைல் போன் பறித்தவர் கைது
மயிலாடுதுறை:பெண்களிடம் மொபைல் போன்கள் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மாங்கனாம்பட்டு ரயில்வே கேட், மயிலகொல்லை, சோதியக்குடி பைபாஸ் பகுதிகளில் ஒரு மாதமாக இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் மொபைல் போன் பறிப்பு சம்பவம் நடந்தது.இதுகுறித்த புகார்களில், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட தாண்டவன்குளம், நவநீதகண்ணபுரத்தை சேர்ந்த அருள்குமரன், 25, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.