நான்கரை வயது சிறுமியை சீண்டிய தாய்மாமன் கைது
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நான்கரை வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, வெளியூரில் இருந்து நான்கரை வயது மகளுடன் தம்பதி சென்றிருந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. தேடிய போது, அருகில் இருந்த கொட்டகையில் அழுது கொண்டிருந்தது. விசாரித்ததில், சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரியவந்தது.சிறுமியை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சீர்காழி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாய் மாமன் தமிழ்வாணன், 42, என்பவரை கைது செய்தனர். தமிழ்வாணனுக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.சீர்காழியில், பிப்., 24ம் தேதி மூன்றரை வயது பெண் குழந்தை, 16 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது குறித்து சர்ச்சையாக பேசிய கலெக்டர் பணியிடம் மாற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி மாணவி
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, கிராமத்தை சேர்ந்த தம்பதியின், 15 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு, உறவினர் உட்பட அப்பகுதியை சேர்ந்த மூவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமி, பள்ளி ஆசிரியரிடம் சம்பவத்தை கூறியதை தொடர்ந்து, ரூரல் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியின், 35 வயது உறவினர், 25 வயது வாலிபர், 85 வயது முதியவர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 85 வயதான உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரிடம் விசாரணை நடக்கிறது.