மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
மயிலாடுதுறை,:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை சேர்ந்தவர் அருண்குமார், 42; பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். தற்போது ரோட்டரி சங்க தலைவராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள பழமையான மாசிலாமணி நாதர் கோவிலில் நடைபெற்ற அர்த்தசாம பூஜையில் பங்கேற்றார்.பின்னர், கடற்கரையில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதியில் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது ரெக்சின் கலந்த எரிபொருளை ஊற்றிய மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். பலத்த தீக்காயமடைந்த அருண்குமாரை, அங்கிருந்த பக்தர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி அளித்த பிறகு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். அருண்குமாரை எரித்துக் கொல்ல முயன்ற நபர்கள் யார், காரணம் என்ன என்பது குறித்து பொறையார் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1