மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
மயிலாடுதுறை:தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.மீனா அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்புடன் 1.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கரையோரம் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கடலுக்குள் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடையக்கூடும் என்பதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
23-Sep-2025
22-Sep-2025 | 1