மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் கொண்டத்துார் அடுத்த வைத்தியநாதபுரம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விளம்பர பலகை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வைத்தியநாதபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். குண்டுகள் மண்தரையில் விழுந்ததால் பாதிப்பு இல்லை.இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பண்டாரவடை நிஷாந்த் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3