உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / தனியார் பஸ் மோதி ஆசாரி பலி

தனியார் பஸ் மோதி ஆசாரி பலி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே தனியார் பஸ் மோதி ஆசாரி உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்,42; ஆசாரி. இவர் நேற்று மாலை தனது டிவிஎஸ். ஸ்கூட்டியில் சீர்காழி நோக்கி சென்றார். மங்கைமடம் கடைவீதி திருப்பத்தில், டிரைவர் தனியார் பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கிய போது பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கிய முத்துகிருஷ்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவெண்காடு போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை