டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் பலி
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூரில் இருந்து எலந்தங்குடியில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு, டிராக்டரில் எம்.சாண்ட் ஏற்றி சென்றனர். டிராக்டரை கீழப்பெரும்பூரை சேர்ந்த பிரவின்.24. என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். டிராக்டரில் பெரம்பூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் திவாகரன்.16. அமர்ந்திருந்தார். வழியில் பண்டாரவாடை நெய்குப்பை அருகில் சென்ற டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.இந்த விபத்தில் டிராக்டரின் உள்ளே சிக்கி திவாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த டிரைவர் பிரவீனை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.