உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மயிலாடுதுறையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நிரல் அறிக்கையால் சர்ச்சை

மயிலாடுதுறையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நிரல் அறிக்கையால் சர்ச்சை

மயிலாடுதுறை,மயிலாடுதுறையில், மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி குறித்து தி.மு.க., - எம்.எல்.ஏ., பெயரில் வெளியான நிகழ்ச்சி நிரல் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நேற்று 4 இடங்களில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் மெய்யநாதன், கோவி செழியன் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கு கட்சியினரை அழைக்கும் விதமாக தி.மு.க., மயிலாடுதுறை மாவட்ட செயலரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நிவேதா முருகன் பெயரில் நிகழ்ச்சி நிரல் அறிக்கை வெளியானது. அதில், 'மக்களுடன் முதல்வர் முகாமை தொடர்ந்து, திருக்கடையூர் மாரியம்மன் கோவிலில், ஆதிதிராவிட மக்களுடன் அமைச்சர்கள் உணவு உண்ணும் நிகழ்ச்சி நடைபெறும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு பட்டியல் இன மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வி.சி. கட்சி மாநில பொறுப்பாளர் வேலு குபேந்திரன், தி.மு.க.,-எம்.எல்.ஏ., நிவேதா முருகன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். ஆனால், அந்த அறிக்கை பொய்யானது என தி.மு.க., தரப்பில் விளக்கம் அளித்தனர்.இந்நிலையில், நேற்று கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மெய்யநாதன், கோவி செழியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தபடி மாரியம்மன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அனைவருடன் உணவருந்திச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !