தல விருட்சம் சாய்ந்தது: பக்தர்கள் வேதனை
மயிலாடுதுறை அருகே நீடூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாதர் கோவில் அமைந்துள்ளது. கிபி ஏழாம் நூற்றாண்டில் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகங்கள் பாடல் பெற்ற பழமையான கோவில். இந்திரனால் கட்டப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. கோவிலில் 200 ஆண்டு பழமையான மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழை மற்றும் மரத்தின் உள்ளே பூச்சிகள் அரித்ததன் காரணமாக, திடீரென்று மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பழமையான மரத்தினை மரபணு மூலம் மீண்டும் புதுப்பித்து அதே இடத்தில் நட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.