உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / வீட்டிற்குள் புகுந்த அரசு பஸ்; பெண் உட்பட இருவர் பலி

வீட்டிற்குள் புகுந்த அரசு பஸ்; பெண் உட்பட இருவர் பலி

மயிலாடுதுறை; அரசு பஸ் மோதிய விபத்தில் கொத்தனார், பெண் துாய்மை பணியாளர் உயிரிழந்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்துார் அரசு கல்லுாரி எதிரே உள்ள டீக்கடையில், செங்கல் சூளை தொழிலாளி சங்கர், 50, நேற்று காலை மொபட்டில் சாலையை கடந்த போது, சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பஸ் சங்கர் மீது மோதியது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கு குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊராட்சி துாய்மை பணியாளர் சரண்யா, 30, மீது மோதி, அருகில் இருந்த பர்வின் நிஷா வீட்டு சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்து நின்றது. விபத்தில் சங்கர், சரண்யா உயிரிழந்தனர். ஆணைக்காரன் சத்திரம் போலீசார் அரசு பஸ் ஓட்டுநர் பாக்கியராஜ், 39, என்பவரை கைது செய்தனர். சரண்யா குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம், அரசு வேலை வழங்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி தாசில்தார் அருள்ஜோதி மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ