உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மினி லாரி மோதி மூதாட்டி பலி

மினி லாரி மோதி மூதாட்டி பலி

மயிலாடுதுறை: சீர்காழியில் பழம் இறக்க வந்த மினி லாரி மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் மனைவி தேத்துருமேரி,70. இவர் சீர்காழி அண்ணா தெருவில் உள்ள மகள் சோபியா வீட்டிற்கு வந்துவிட்டு ஊர் திரும்புவதற்காக கொள்ளிடம் முக்குட்டு பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பிடாரி வடக்கு வீதியில் கடைக்கு பழம் இறக்க வந்த மினி லாரி மோதியதில் தேத்துருமேரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலின் பேரில் சீர்காழி போலீசார் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த தேத்துருமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினிலாரி டிரைவர் திண்டுக்கல் பெனட் ராஜா,33, என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சீர்காழி நகருக்குள் வரும் வாகனப் போக்குவரத்தை போலீசார் உரிய முறையில் ஒழுங்கு படுத்தாததே இது போன்ற விபத்துக்கு காரணமாக அமைகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை