உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / விபத்து வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு பணம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்

விபத்து வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு பணம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்

சீர்காழி அருகே நடந்த விபத்து தொடர்பான வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு பணம் கேட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மங்கைமடம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் பிரவீன் ராஜ்.35. இவர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தனது டூவீலரில் சீர்காழி நோக்கி வந்துள்ளார். எதிரே மாதானம் குருவியம்பலம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் டூவீலரில் வந்துள்ளார். இருவரும் சட்டநாதபுரம் உப்பனாரு பாலம் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து பிரவீன்ராஜ் சீர்காழி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அறிந்த தனிப்படை காவலரான பிரபாகரன் என்பவர் விபத்தில் தொடர்புடைய சங்கரை மொபைல் போனில் அழைத்து ரூ.5 ஆயிரம் கொடுங்கள் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்து விடுகிறேன் என்றும் எனக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் ஏடிஎஸ்பி. லிங்க் உள்ளது என்று பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து பிரபாகரன் தனிப்படையில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், புதுப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் பிரபாகரனை மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை