உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / கத்தியை காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் புது நகரை சேர்ந்தவர் கலைவேந்தர்.90. ஓய்வு பெற்ற தமிழாசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மர்ம நபர்கள் மூன்று பேர் ஆசிரியர் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி பீரோவில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில், குத்தாலம் போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரிடம் விசாரணை நடத்தினர். கொள்ளை அடித்து விட்டு மர்ம நபர்கள் வெளியே ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ