உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / மாயமான வாலிபர் உடல் கடற்கரையில் ஒதுங்கியது

மாயமான வாலிபர் உடல் கடற்கரையில் ஒதுங்கியது

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே மாயமான வாலிபரின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூர் மீனாட்சி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பானுஸ்ரீதர்.21. பட்டதாரியான இவர் சென்னையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த பானுஸ்ரீதர் நேற்று பிள்ளைபெருமாள் நல்லூர் கடற்கரையில் தனது டூவீலரில் நிறுத்தி விட்டு மாயமானார். இதுகுறித்து பானு ஸ்ரீதரின் தாயார் கஸ்தூரி பொறையார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பானு ஸ்ரீதர் கடற்கரை வழியே புதுப்பேட்டை வரை நடந்து சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில் இன்று மாலை இறந்த பானு ஸ்ரீதரின் உடல் சந்திரபாடி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொறையார் போலீசார் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி