உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / சிறுமியை மணந்த வாலிபர் கைது

சிறுமியை மணந்த வாலிபர் கைது

மயிலாடுதுறை : சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு கோவையில் தனியார் பஞ்சு மில்லில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த மகேந்திரன் மகன் பாலமுருகன்.19; என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக நெருங்கி பழகி வந்தனர்.அதனையொட்டி, பாலமுருகனும், சிறுமியும் திருமணம் செய்து கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தனர்.இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, பாலமுருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ