உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / நாகையில் கடைகள் எரிந்து சாம்பல்

நாகையில் கடைகள் எரிந்து சாம்பல்

நாகப்பட்டினம் : நாகையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் எரிந்து சாம்பலாகின. நாகை,பெரிய கடைத்தெருவில் மணிஷா ரெடிமேட்ஸ் ஸ்டோர் என்ற கடை வைத்திருப்பவர் தர்மலிங்கம்,47, இவரது கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்தது.அருகில் இருந்த கோவிந்தராஜ்,60, என்பவரின் பேன்சி ஸ்டோருக்கும் தீ பரவியதில் இரண்டு கடைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர்,தீயை அணைத்து அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் தீ பரவாமல் தடுத்தனர். சேத மதிப்பு 13 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து நாகை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை