வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல முன்னேற்றம். பாராட்டுக்கள்.
நாகப்பட்டினம்: கடலில் படகுடன் மாயமாகும் மீனவர்களை உயிருடன் உடனடியாக மீட்கவும், சட்ட விரோத செயல்களை தடுக்க ட்ரோன் கண்காணிப்பு சேவையை துவங்கவும், நாகை மாவட்ட நிர்வாகத்துடன், ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், கடலில் ஏற்படும் பருவகால மாற்றம் காரணமாக, சில நேரங்களில் படகுடன் மாயமாகி விடுகின்றனர். இதுபோன்ற நேரங்களில், 100 கி.மீ., வேகத்தில், 100 கி.மீ., துாரம் சென்று, துல்லியமாக கண்காணித்து, விரைந்து மீட்பு படையினர் உயிருடன் மீனவர்களை மீட்கும் வகையிலும், கடல் பரப்பில் வெளிநாட்டு சக்திகள் நடமாட்டம், சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, ட்ரோன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரவிலும் துல்லியமாக கண்காணிக்கும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் இயக்க, நாகை மாவட்ட நிர்வாகத்துடன், தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக நாகை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளதாக தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்ல முன்னேற்றம். பாராட்டுக்கள்.